News September 5, 2025
பாஜக நிர்வாகி மீது அரிவாள் தாக்குதல்: 3 பேர் கைது

கோவை பீளமேடு அருகே பா.ஜ.க மண்டல துணைத் தலைவர் அஜய் (36) மீது அரிவாளால் தாக்கிய வழக்கில் நாகராஜ், அஸ்வின், அனிதா ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் மற்றும் புகையிலை பொருள் விற்பனை குறித்த புகாரே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பின் காயமடைந்த அஜய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தலைமறைவாக உள்ள முருகேசன், அஜய்யின் மனைவி பிரியாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News April 11, 2026
கொலை வழக்கில் குண்டாஸ்: கோவை கலெக்டர் அதிரடி

கோவை சுல்தான்பேட்டை பகுதியில் சதீஷ்குமார் என்பவரைக் கொலை செய்த வழக்கில் முருகன் (எ) சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது குற்றப்பின்னணியைக் கருத்தில்கொண்டு, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், நேற்று அவர் மீது குண்டர் சட்டம் பாய்த்து சிறையில் அடைக்கப்பட்டார்.
News April 11, 2026
VIRAL: கோவையில் பதறவைத்த பாம்பு

கோவைபுதூர் ரிங் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், குறுக்கே வந்த நல்ல பாம்பைக் கண்டு பயந்து வண்டியை நிறுத்தி ஓடினார். அப்போது அந்தப் பாம்பு பைக்கின் மீது ஏறி, நீண்ட நேரம் படம் எடுத்தாடியது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு பாம்பு தானாகவே புதருக்குள் சென்றதால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.
News April 11, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


