News November 6, 2025
’பாஜக நிர்வாகிக்கு மூளை மழுங்கிப்போச்சு’

மும்பையில் இஸ்லாமியர்கள் மேயராக வரமுடியாது என பாஜக நிர்வாகி அமீத் சதாம் கூறியதற்கு உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த ஆனந்த் துபே பதிலடி கொடுத்துள்ளார். மும்பை பாஜக தலைவரானதில் இருந்து அமீத்துக்கு மூளை மழுங்கிப்போனதாக சாடிய அவர், பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இப்படி பேசுகிறார் என கூறினார். இதனையடுத்து பாஜக நிர்வாகியை சாடிய ஆனந்தே, மராத்தி இந்துதான் மும்பையில் மேயராக வருவார் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News November 7, 2025
அடுத்த சில மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பொழியும்

அடுத்த சில மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவு நேர பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக செல்லுங்கள். மேலும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News November 7, 2025
பிஹாரில் அதிகபட்சமாக 64.66% வாக்குப்பதிவு

பிஹாரில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI அறிவித்துள்ளது. இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது. SIR நடவடிக்கை, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையே இதற்கு காரணம் என தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
News November 7, 2025
விளையாட சென்றவர் பிணமாக திரும்பினார்… சோக மரணம்!

உ.பி., ஜான்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரின் அகால மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த 30 வயது ரவீந்திரா, சம்பவத்தன்று அதிகாலையில் எழுந்து, ‘அப்பா நான் விளையாடப் போறேன்’ சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக சென்றிருக்கிறார். சில ஓவர்கள் பவுலிங் செய்துவிட்டு தாகத்துக்கு தண்ணீர் குடித்தவர், அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இப்படியா முடிவு வரணும்!


