News March 31, 2024
பாஜக நிர்வாகிக்கு நடைவண்டி சின்னம்!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்காததால் பாஜகவின் மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் நடைவண்டி சின்னம் ஒதுக்கீடு செய்தார்.
Similar News
News April 16, 2025
ராஜபாளையத்தில் பால் வியாபாரி கொலையா?

ராஜபாளையம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி சுப்பிரமணியன்(55). இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளை சுப்பிரமணியன் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவரது உடலை மயானத்துக்கு கொண்டு சென்ற போது அதில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 16, 2025
விருதுநகரில் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 15, 2025
தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.