News January 19, 2026
பாஜக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்? தமிழிசை

தமிழுக்கு எதிரான கட்சி என விமர்சிப்பவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக <<18891828>>தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு <<>>தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடித்தட்டு மக்களுக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கும் விதமாகவும், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற கூடியதாகவும் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் போலீசார் குவிப்பு!

கிருஷ்ணகிரியில் குடியரசு தினத்தையொட்டி இன்று (ஜன.26) 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக பாதுகாப்பு பணிகளுக்காக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News January 26, 2026
வெள்ளி இன்று கிலோவுக்கு ₹10,000 உயர்வு!

<<18960694>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று(ஜன.26) வெள்ளி விலை 1 கிராம் ₹10 உயர்ந்து ₹375-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹3,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 7% உயர்ந்து ஒரு அவுன்ஸ்(28g) $108-க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
News January 26, 2026
ரேஸிங்கிற்கு பிரேக்: பைக் ரைடுக்கு கிளம்பிய AK!

கார், பைக் என இரண்டிலும் தீவிரம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அஜித். சினிமாவிற்கு சின்ன கேப் விட்டு, கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அவர், மீண்டும் பைக் ரைடுக்கு புறப்பட்டு விட்டார். தற்போது துபாயில் உள்ள அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் & ஓமன் வழியாக பைக் ரைட் ஒன்றுக்கு கிளம்பியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஐரோப்பாவில் அஜித் பைக் ரைட் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


