News August 18, 2025
பாஜக தலைவர் நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு

பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் இன்று நேரடியாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உரையாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரடியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேரம் இருவரும் உரையாடி உள்ளதாகவும் அரசியல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2026
நாங்குநேரி இரட்டைக்கொலையில் மேலும் 2 பேர் கைது

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் மதுபோதையில் வந்த மர்ம்கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை அடிரடியாக கைது செய்தனர். அதேபோல் கொலை சம்பவம் குறித்து சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News March 6, 2026
நெல்லை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<
News March 6, 2026
BREAKING திருநெல்வேலி: பஸ் மோதி இருவர் பலி

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே இன்று கட்டுப்பாட்டை இழந்த கேரள அரசுப் பேருந்து மோதி அருகில் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஹரிஹரசுதன்(26), நாகராஜன் (25) ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேருந்தை பறிமுதல் செய்தனர்.


