News December 14, 2025

பாஜக செயல் தலைவர்.. யார் இந்த நிதின் நபின்?

image

பிஹாரின் பங்கிப்பூர் MLA-வாக 4-வது முறையாக வெற்றி பெற்ற <<18563200>>நிதின் நபின்<<>>, அம்மாநில சாலை கட்டுமானத் துறை அமைச்சராகவும் உள்ளார். 2023 சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக வெற்றி பெறவே முடியாது என கூறப்பட்ட நிலையில், அங்கு தேர்தல் பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டு பாஜகவை ஆட்சியில் அமர வைத்தார். 45 வயதான இவர், பாஜக தொடங்கப்பட்ட அதே ஆண்டு பிறந்து, கட்சியின் தேசிய செயல் தலைவரான பெருமையையும் பெற்றுள்ளார்.

Similar News

News March 2, 2026

BREAKING: மொத்தமாக மாறினர்.. விஜய்க்கு இழப்பு

image

திமுக அளிக்கும் 25 தொகுதி ஆஃபரை ஏற்க முடியாது என காங்., வெளிப்படையாகவே கூறிவிட்டது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என காங்., MLA-க்களிடம் கருத்து கேட்டதில், பெரும்பாலானோர் திமுகவுடனே செல்ல வலியுறுத்தினராம். முன்னதாக, காங்., தரப்பிலிருந்து பலர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், இச்செய்தி விஜய் தரப்புக்கு ஏமாற்றமளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News March 2, 2026

பாலியல் வழக்கில் சிக்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர்

image

பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் சிதம்பரம் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக, இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் சிதம்பரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 2, 2026

40 ஆண்டுகளாக செய்ய நினைத்தது இதான்: இஸ்ரேல் PM

image

டெஹ்ரானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு கூறியுள்ளார். வரும் நாள்களின் இது மேலும் அதிகரிக்கும் என்ற அவர், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டது மிகுந்த வலி கொடுப்பதாகவும் பேசியுள்ளார். தற்போது தங்களுடன் USA-ம் சேர்ந்துள்ளதால் 40 ஆண்டுகளாக செய்ய நினைத்ததை தான் இப்போது செய்யப்போவதாகவும், தீவிரவாதத்தை அழிப்பதே இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!