News November 7, 2025
பாஜக அழைப்பு விடுத்தது: செங்கோட்டையன் பரபரப்பு

பாஜக தூண்டிவிடுவதால்தான் போர்க்கொடி தூக்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்கவும், கூட்டணிக்காக பேசவும் தான் பாஜக தன்னை அழைத்ததாகவும், தன்னை வைத்து கட்சியை உடைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனவே, பாஜக சொன்னதால்தான் 6 அமைச்சர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு பற்றி EPS-யிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
தேமுதிக வரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது: ஸ்டாலின்

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவை ஸ்டாலின் வருக வருக என வரவேற்றுள்ளார். தனது X பக்கத்தில், கருணாநிதி மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக இன்று கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கருப்பு சிவப்பை கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து TN உயர்வுக்கு பங்களிக்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 19, 2026
வெள்ளி விலை ஒன்று ஒரே நாளில் ₹10,000 மாறியது!

<<19181398>>தங்கம்<<>> போலவே வெள்ளி விலையும் இன்று(பிப்.19) ஏற்றம் கண்டுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹10 உயர்ந்து ₹270-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹2,70,000-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வானது கடந்த மாதங்களில் முதலீடு நோக்கத்தில் வெள்ளி வாங்கி குவித்தவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 5% வரை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News February 19, 2026
அடுத்து ₹10,000 கொடுப்பீங்களா? சீமான்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் ₹2 லட்சம் கடன் உள்ளதாக சீமான் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், தேர்தல் நெருங்கும் சமயத்தில் பெண்களுக்கு ₹5,000 கொடுத்த திமுக அரசு, அடுத்த தேர்தல் வரும்போது ₹10,000 கொடுப்பீங்களா என கேள்வியெழுப்பியுள்ளார். TN அரசு வாங்கிய கடனுக்கு ₹1 லட்சம் கோடிக்கு மேல் வட்டி கட்டுகிறது என்றும், இலவசங்களை வாரி வழங்கிவிட்டு வரிகளை உயர்த்துகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.


