News July 28, 2024
பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று(ஜூலை-27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையில் நாகர்கோவில் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜய் வசந்த் எம் பி சிறப்பு கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினார்.
Similar News
News March 4, 2026
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (மார்ச் 4) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 22.27 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 22.20 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 4.66 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 4.75 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 524 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
News March 4, 2026
குமரி: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!

பளுகல் அருகே புன்னாக்கரை பகுதியைச் சேர்ந்தவர் டாளி (62). இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் டாளி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது டாளி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பளுகல் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 4, 2026
குமரி: நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு.!

சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (27). இவர் வெள்ளாங்கோடு முந்திரி ஆலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அவர் தங்கச் சங்கிலி பிடித்துக் கொள்ளவே, ஆறரை பவுன் கொள்ளையர்கள் கையில் சிக்கிக் கொண்டது. இது குறித்து அருமனை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


