News March 17, 2026
பாஜகவில் இணைந்த கம்யூனிஸ்ட் MLA

கேரளாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநில அரசியலில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MLA முகுந்தன் பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என கூறியதால் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், நட்டிகா தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் களமிறங்குவார் என கூறப்படுகிறது.
Similar News
News March 27, 2026
PCOD, PCOS பிரச்னைகளுக்கு எளிய தீர்வு!

90% பெண்களுக்கு PCOD, PCOS போன்ற மாதவிடாய் பிரச்னைகள் இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய, கைவைத்தியம் இருக்கிறது. கருப்பட்டி, பெருங்காயம், பூண்டை சம அளவு எடுத்து இடித்து, அதை நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடித்து சாப்பிட வேண்டும். 1 மாதத்திற்கு காலையில் சாப்பிட்டு வர PCOS சரியாகும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதோடு உடற்பயிற்சி செய்வதும், சத்தான உணவுகளை உட்கொள்வதும் அவசியம். SHARE.
News March 27, 2026
BREAKING: தனித்து போட்டி.. இரவில் அறிவித்தார்

70 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் 12 – 15 சீட் வரை கேட்டோம்; 7 தொகுதிகளை கூறச் சொன்னார்கள் என்ற அவர், EPS உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றார். அதிமுக புறக்கணித்ததை எண்ணி தேவேந்திர குல மக்கள் வேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் ராஜ்யசபா சீட்டையும் கேட்டிருந்தார்.
News March 27, 2026
திருப்பதி பக்தர்களே.. இத கொஞ்சம் கவனியுங்க!

கோடை விடுமுறையில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், கேஸ் தட்டுப்பாட்டால் பலரும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றனர். கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதால், உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எனினும், கோயிலின் அன்னதானம், பிரசாத விநியோகத்தில் தடை இல்லை. இதனால், பக்தர்கள் கைகளில் உணவுகளை எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


