News November 10, 2025

பாஜகவிற்கு ஆதரவு இல்லை.. வெளிப்படையாக அறிவிப்பு

image

நாங்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட கட்சியையோ, அரசியல் தலைவரையோ ஆதரிப்பதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாங்கள் ராமர் கோயிலை கட்ட விரும்பினோம், அதனால் தான் பாஜகவை ஆதரித்தோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ராமர் கோயிலை கட்ட விரும்பியிருந்தால், அக்கட்சியை ஆதரித்து இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கொள்கைக்குதான் ஆதரவு, கட்சிக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து சேலம் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் கசாயம்!

image

சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவும், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறவும் புதினா கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✤தேவையானவை: புதினா, மிளகுத்தூள், உப்பு ✤செய்முறை: புதினாவை கிள்ளி போட்டு, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி, இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். அனைவருக்கும் இச்செய்தியை பகிரவும்.

News November 10, 2025

தமிழகத்தில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

image

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 3 இடங்களில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, காஞ்சிபுரம் மாவட்ட மாங்காடு நகராட்சியில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதன்போது, 34 வகையான கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும்.

error: Content is protected !!