News February 1, 2026

பாஜகவின் கிளை அமைப்பு அதிமுக: மு.க.ஸ்டாலின்

image

எங்கள் கூட்டணியை, தோழமையை எதிரிகள் பிரிக்க பார்த்தனர்; ஆனால், அவர்களால் அது முடியவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கும் NDA கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று பேசிய அவர், அதிமுக தனிக்கட்சி கிடையாது, பாஜகவின் கிளை அமைப்பு என்று விமர்சித்தார். மேலும், மதுராந்தகம் கூட்டத்தில் அதிமுக பெயரை PM மோடி ஏன் உச்சரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Similar News

News February 17, 2026

பிரசவம் பார்த்த பள்ளி மாணவி..

image

உ.பி.,யின் பஸ்கேரியில் உள்ள தனியார் நர்ஸிங் ஹோமில் +2 மாணவி மேற்கொண்ட சிசேரியன் ஆபரேஷனால் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், வெறும் ₹3,000-க்கு இந்த ஆபரேஷன் செய்யப்பட்டதும், அது போலி நர்ஸிங் ஹோம் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த நர்ஸிங் ஹோமை நடத்தி வந்த மாணவி சுபம், BA பட்டதாரியான யோகேஷ்(32) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போலி டாக்டர், நர்ஸ்களிடம் பொதுமக்கள் உஷாரா இருங்க.

News February 17, 2026

கடன் தள்ளுபடி: அமைச்சர் பட்டியலை வெளியிட்டார்

image

பட்ஜெட் தாக்கலின்போது, 2021-ல் கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டியலிட்டார். அதன்படி, ₹12,359 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள், ₹4,880 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் ₹2,118 கோடி மதிப்பிலான கடன்களையும் அரசு தள்ளுபடி செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 17, 2026

கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: ஷோடங்கர்

image

பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் அழைப்புக்காக காத்திருக்கிறோம் என கிரிஷ் ஷோடங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், கூட்டணி உள்பட அனைத்து விசயங்கள் குறித்தும் 5 பேர் கொண்ட கமிட்டி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்போம் என்றும், அதுவரை யாரும் கூட்டணி தொடர்பான விவரங்களை பேசக்கூடாது; கூட்டணியில் எந்தவித பிரச்னையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!