News December 23, 2025

பாஜகவின் ஆயுதம் CBI, ED: ராகுல் காந்தி

image

எதிர்க்கட்சியினரை குறிவைத்து இந்திய விசாரணை அமைப்புகள் ஏவப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனியில் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவினர் மீது ஒரு வழக்கு கூட இல்லை என்றும், CBI, ED பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர் என்று குறிப்பிட்ட அவர், பாஜகவின் கொள்கைகள் மக்களிடையே சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.

Similar News

News December 27, 2025

CM ஸ்டாலினின் சவாலுக்கு பதில் சவால் விடுத்த EPS

image

<<18676065>>CM ஸ்டாலின்<<>> விடுத்த சவாலுக்கு EPS பதிலளித்துள்ளார். பல ஆண்டுகளாக அவருக்கு, தான் வைத்த ஓபன் சேலஞ்ச் இன்னும் Pending-ல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள EPS, அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே CM ஸ்டாலின் வேலையாக கொண்டுள்ளார் என விமர்சித்துள்ளார். மேலும், நேருக்குநேர் மேடை ஏறி, தனது கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரா எனவும் சவால் விடுத்துள்ளார்.

News December 27, 2025

மழை மீண்டும் வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

image

தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்து பனிப்பொழிவு அதிகமாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. அதாவது, நாளை மறுநாள்(டிச.29) தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், டிச.30 முதல் ஜன.2 வரை டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலர்ட்டா இருங்க மக்களே!

News December 27, 2025

ஹெச் வினோத் என்ன பேசப் போகிறார்?

image

ஜனநாயகன் பட ரிலீஸுக்கு இன்னும் 13 நாள்களே உள்ளன. படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜய்யின் கடைசி பட இயக்குநரான ஹெச் வினோத், மேடையில் விஜய், ஜனநாயகன் குறித்து என்ன பேசப் போகிறார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தனியார் விருதுவிழா மேடை தவிர வினோத் இதுவரை ஜனநாயகன் குறித்து எங்கேயும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!