News December 20, 2025
பாசிச சக்திகளை விரட்ட வேண்டும்: DCM உதயநிதி

2026 தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்று என DCM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பாசிச சக்திகள் பழைய அடிமைகளுடன் புதுப்புது அடிமைகளை தேடி கண்டுபிடித்துள்ளதாகவும், தேர்தலில் நம்மை எதிர்க்கும் அவர்களை மக்கள் ஆதரவுடன் விரட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் சர்வாதிகாரத்திற்கும், சமூக நீதிக்கும் இடையேயானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 20, 2025
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், மாற்றுக்கட்சியினரை இழுக்கும் வேலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற அமைச்சர்கள், தேர்தல் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தினர்.
News December 20, 2025
இந்த வார ஓடிடி ட்ரீட்!

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள், வெப் தொடர்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’: டிச.19, சன் நெக்ஸ்ட் *மம்முட்டியின் ‘டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’: டிச.19, ஜீ 5 * ‘ஹார்டிலே பேட்டரி’ வெப் சீரிஸ்’: ஜீ5 *’திவ்ய திருஷ்டி’: சன் நெக்ஸ்ட் *’ஃபார்மா’ வெப் சீரிஸ்: ஹாட்ஸ்டார் *’ராஜு வெட்ஸ் ரம்பை’: Etv Win *’The Great Indian Kapil Show’: நெட்பிளிக்ஸ்
News December 20, 2025
யுவராஜ் சிங்கின் ₹2.5 கோடி சொத்துகள் முடக்கம்

யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகைகள் நேஹா சர்மா, ஊர்வசி ரவுதேலா உள்ளிட்டோரின் சொத்துகளை ED முடக்கியுள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலிகள் கோடிக்கணக்கில் பண முறைகேடு செய்த வழக்கை ED விசாரித்து வருகிறது. அதன் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பெற்ற பணத்தில் அவர்கள் சொத்துகளை வாங்கியது உறுதியானது. இந்நிலையில், யுவராஜின் ₹2.5 கோடி, சோனு சூட்டின் ₹1 கோடி என மொத்தமாக ₹7.93 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.


