News January 11, 2026
பாக்., ராணுவத்துக்கு தொடர்பு: ஒப்புக்கொண்ட பயங்கரவாதி

பாகிஸ்தான் இராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஒப்புக்கொண்டுள்ளான். ஆம்! சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கு எதிராக பேசிய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை தலைவரான ஷைபுல்லா கசூரி, பாக்., ராணுவம் தங்களின் வீரர்களின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளை செய்ய தன்னை அழைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.
Similar News
News February 3, 2026
மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு: EPS

அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி, அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன் அண்ணா என EPS புகழாரம் சூட்டியுள்ளார். அன்றைய கொடுங்கோல் காங்., ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட வெற்றிதான், TN அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
கட்டாயம் ஒருமுறையாவது சுவைக்க வேண்டிய டீக்கள்

டீ வெறும் வார்த்தையல்ல, அது ஒரு எமோஷன். டீயை பருகுவதில்லை, சுவாசிக்கிறோம். ஒரு கப் டீ உடன், சின்ன உரையாடல், சிரிப்பு, நிம்மதி என பல அனுபவங்கள் கலந்திருக்கின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு வகையான டீ வகைகள் உள்ளன. அதில், நீங்கள் ஒருமுறையாவது சுவைக்க வேண்டிய டீக்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த டீ எது?
News February 3, 2026
வெள்ளி விலை ஒரே நாளில் ₹20,000 குறைந்தது

3 நாள்களுக்கு பிறகு தங்கம் விலை உயர்ந்து ஷாக் கொடுத்தாலும், வெள்ளி விலை குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 குறைந்து ₹280-க்கும், 1 கிலோவுக்கு ₹20,000 குறைந்து ₹2.8 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து இறங்கு முகத்திலே உள்ளது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


