News August 20, 2024

பாக்., மைதானங்கள் சர்வதேச தரத்தில் இல்லை

image

பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள் சர்வதேச தரத்தில் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி வெளிப்படையாக விமர்சித்துள்ளார். பாக்., உள்ள எந்தவொரு மைதானத்திலும் போதுமான இருக்கைகள், குளியலறைகள் இல்லை எனக் கூறிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் கடாபி ஸ்டேடியம் உள்ளிட்டவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

நாகை: பைக் மீது மோதிய கார் – துடிதுடித்து இளைஞர் பலி

image

மன்னார்குடியை சேர்ந்தவர் நிஷாந்த்(35). இவரும் இவரது நண்பருமான பாலசுந்தரம்(40) என்பவரும் நேற்று வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி பைக்கில் சென்றபோது, பரவை அருகே எதிரே வந்த கார் பைக் மீது விபத்தி ஏற்பட்டது. இதில் நிஷாந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலே உயிரிழந்தார். பாலசுந்தரம் படுகாயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுதிக்கப்பட்டார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 5, 2026

RBI தங்கம் கொள்முதல் பாதியாக குறைந்தது!

image

தங்கம் கொள்முதலை RBI குறைத்துள்ளது. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் துருக்கி 8 டன், ரஷ்யா 6 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. 2025-ம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 26 டன் தங்கம் கொள்முதல் செய்த RBI, இந்தாண்டின் முதல் 2 மாதங்களில் மாதத்திற்கு 12.5 டன் மட்டுமே வாங்கியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மந்தநிலையில் நீடித்து வருகிறது.

News April 5, 2026

பரப்புரையை தொடங்குகிறார் அண்ணாமலை

image

பாஜகவின் நட்சத்திர பரப்புரையாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இன்று முதல் அண்ணாமலை தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். கோவை வடக்கு தொகுதியில், வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிக்கிறார். இதனையடுத்து, நாளை அவிநாசி தொகுதியில் L.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

error: Content is protected !!