News February 24, 2026

பாகற்காயின் நன்மைகள்

image

பாகற்காயை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நுரையீரல், அழற்சி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்க அடிக்கடி பாகற்காயை சாப்பிடுவது அவசியம். வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் இருப்பதால் கண் பார்வையை கூர்மையாக்க உதவுகிறது.

Similar News

News February 27, 2026

முட்டை விலை மேலும் குறைந்தது

image

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முட்டை கொள்முதல் விலை ₹5 இருந்து ₹4.80 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் முட்டை விலை 60 காசுகள் சரிந்துள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பண்ணையாளர்கள் கவலையில் உள்ளனர். உங்கள் ஊரில் ஒரு முட்டை விலை என்ன?

News February 27, 2026

ஆதாரத்தை சமர்ப்பிப்பேன்.. விஜய்யின் மனைவி

image

விஜய்யையும் நடிகை ஒருவரையும் தொடர்புபடுத்தி அவரது மனைவி சங்கீதா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நடிகையுடன் விஜய் வெளிநாட்டிற்கு சென்றதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை நடிகை வெளியிட்டபோது குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் அந்த நடிகை யார் என்பதை கோர்ட்டில் தெரிவிப்பேன் என்றும், ஆதாரங்களை சமர்ப்பிப்பேன் எனவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

News February 27, 2026

விஜய் மனரீதியாக துன்புறுத்தினார்: சங்கீதா

image

ஒரே வீட்டிலேயே விஜய்யும் தானும் தனித்தனியாக வாழ்ந்துவந்ததாக மனைவி சங்கீதா மனுவில் கூறியுள்ளார். நடிகையுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, விஜய் மனரீதியாக துன்புறுத்தினார் என்ற அவர், நிதி கட்டுப்பாடுகளை விதித்து அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யின் பொதுவாழ்க்கைக்கு பங்கம் வரக்கூடாது என பரஸ்பர விவாகரத்து கோரியதாகவும், ஆனால் விஜய் அதற்கு உடன்பட மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!