News March 4, 2026
பஹல்காம் தாக்குதல் வழக்கில் சீனாவிடம் உதவி கேட்கும் NIA

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட GoPro Hero 12 Black ரக கேமராவை ஆய்வு செய்ததில், அது 2024 ஜன.30-ம் தேதி சீனாவின் டோங்குவான் பகுதியில் முதல்முதலாக பயன்படுத்தியதும், பின்னர் சீன விநியோகஸ்தர் மூலம் கேமரா கைமாறியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சர்வதேச சட்ட உதவி கோரி சீன அதிகாரிகளுக்கு NIA கடிதம் அனுப்பியுள்ளது.
Similar News
News March 27, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று (மார்ச் 27) அதிரடியாக குறைந்துள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் $165 குறைந்து $4,388-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $4 குறைந்து $68-க்கும் வர்த்தகமாகிறது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் இன்று தங்கம், வெள்ளி விலை கடும் சரிவைச் சந்திக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 27, 2026
மத்திய மண்டலத்தில் 28 தொகுதிகளில் அதிமுக

மத்திய மண்டலத்தில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் அதிமுக 28 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இவற்றில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 23 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக வலுவாக உள்ள தஞ்சை, திருவாரூரில் பாஜகவும், கும்பகோணத்தில் தமாகா தாமரை சின்னத்திலும் களம்காண உள்ளனர். <<-se>>#TNELECTION2026<<>>
News March 27, 2026
பாஜகவை காலி செய்ய திமுக – அதிமுக ஒப்பந்தம்: சீமான்

தமிழகத்தில் பாஜகவை வீழ்த்த அதிமுக – திமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட சீமான், திமுக அமைச்சர்கள் களம் காணும் தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாகவும், தமிழகத்தில் பாஜக வரக்கூடாது என இரு கட்சிகளும் திட்டமிட்டு வேலை செய்தாக தெரிவித்துள்ளார். மேலும், இரு கட்சிகளுக்கும் மதுபான ஆலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதாக கூறினார். <<-se>>#TNELECTION2026<<>>


