News September 7, 2025
பஸ் ஓட்டுனர் தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு!

சேலம்; ஆத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநரான சக்திவேல் என்பவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சக்திவேல் என்பவரை சதீஷ்குமார், ராஜ்குமார், பரமசிவம், மற்றும் தங்கதுரை ஆகிய நான்கு பேர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆத்தூர் நகர போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 8, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் இன்று (07.09.2025) மறுநாள் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
சேலம் மாநகர காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

சேலம் மாநகர காவல் இன்று 7-9-25 ஞாயிறு, இரவு ரோந்து அதிகாரிகள் விவரம், சேலம் டவுன் ஆய்வாளர் தேவராஜன், அன்னதானப்பட்டி ஆய்வாளர் பழனி, கொண்டலாம்பட்டி ஆய்வாளர் மோகனா, அம்மாபேட்டை ஆய்வாளர் விஜேந்திரன், அஸ்தம்பட்டி ஆய்வாளர் யுவராஜ், சூரமங்கலம் ஆய்வாளர் மனோன்மணி, மேலும் புகார் தொடர்பான உதவிக்கு 9486094666 என்ற எண்ணை அழைக்கலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
சேலம்: நோய் தீர்க்கும் அற்புத கோயில்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு SHARE பண்ணுங்க!