News November 24, 2025
பவாரியா கொள்ளையர்கள் வழக்கு கடந்து வந்த பாதை (1/2)

கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனத்தின் வீட்டில் 2005 ஜன.9 அன்று நள்ளிரவில் புகுந்த பவாரியா கும்பல், அவரை கொலை செய்துவிட்டு 65 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து இந்த கும்பலைச் சுட்டுப்பிடிக்க அப்போதைய CM ஜெயலலிதா ஐஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்தார். அவர்கள் ஹரியானாவை சேர்ந்த ஓம் பிரகாஷ், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 25, 2025
தாக்கத்தை ஏற்படுத்துமா OPS, செங்கோட்டையன் அரசியல்

அதிமுகவை ஒருங்கிணைத்தே தீருவோம் என்று தேவர் குருபூஜை அன்று டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சபதம் ஏற்றனர். ஆனால், சபதம் எடுத்து 25 நாள்களிலேயே புதிய கட்சியை தொடங்குவேன் என்று OPS கூறுகிறார். மறுபுறம் செங்கோட்டையனோ தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க தொடங்கினால், 2026-ல் தமிழக அரசியலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
News November 25, 2025
600 முறை மரணத்தை ஏமாற்றிய லெஜண்ட் காஸ்ட்ரோ!

கியூப புரட்சியாளரும், முன்னாள் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோ மறைந்த நாள் இன்று. அவரை கொல்ல அமெரிக்கா 600 முறை முயற்சித்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். ஆனால் அந்த 600 சதி திட்டங்களையும் தகர்த்தெறிந்து 90 வயது வரை வாழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ. 2016-ம் ஆண்டு நவ.25-ம் தேதி வயது மூப்பின் காரணமாகவே அவர் காலமானார். இன்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஐகான்களில் ஒருவராக திகழ்கிறார்.
News November 25, 2025
இதுதான் ராமர் கோயிலில் ஏற்றப்படும் கொடி!

அயோத்தி ராமர் கோயிலில் PM மோடி ஏற்றி வைக்கும் கொடியின் முதல்கட்ட படங்கள் வெளியாகி உள்ளன. செங்கோண முக்கோண வடிவில் 20 அடி நீளம், 10 அடி அகலத்தில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியானது ராமரின் சக்தியையும், வீரத்தையும் குறிக்கும் வகையில், சூரியனின் உருவத்தை கொண்டுள்ளது. மேலும், ‘ஓம்’ மற்றும் கோவிதர் மரமும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.


