News December 12, 2025
பவானி அருகே அழுகிய நிலையில் மிதந்த சடலம்!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணவாய்க்கால் பகுதியில், காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உடலை மீட்டு உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
ஈரோடு: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News December 12, 2025
ஈரோடு கலெக்டர் எச்சரிக்கை!

ஈரோடு ஆட்சியா் பெயரில் முகநூலில் போலி கணக்குகள் பதிவு செய்து தவறான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவருகிறது. இவ்வாறு ஆட்சியா் பெயரில் செயல்படும் போலியான முகநூல் கணக்குகளை பொதுமக்கள் யாரும் நம்பி பணம் வழங்க வேண்டாம். ஆட்சியா் பெயரில் தவறான,சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை தெரிவித்தார்.
News December 12, 2025
ஈரோடு அருகே சிறுவர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

ஈரோடு பெரிய சேமூர் அடுத்த அம்மன் நகர் சாத்வித் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இதன் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட அந்த வசிக்கும் 17 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பொதுமக்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் நாயை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.


