News April 16, 2025
பவானியில் பாலியல் தொழில் !

பவானி கூடுதுறை ரோட்டில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்தத் தகவலின் பேரில் பவானி டி.எஸ்.பி ரத்தினகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் தங்கி இருந்த ஐந்து நபர்கள் மற்றும் ஐந்து பெண்களை விசாரித்தனர். விசாரணையில் அங்கு பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து விடுதியின் மேலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
Similar News
News January 22, 2026
ஈரோடு: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
ஈரோடு: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 22, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் மற்றும் வேளாண் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நேரில் விவாதிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் கூட்டத்தில் விளக்கமளிக்க உள்ளனர்.


