News February 27, 2025

பவானிசாகர் அணை நீர்மட்ட நிலவரம்

image

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணை 105 அடி நீர்மட்ட கொள்ளளவு கொண்டது. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 126 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 87.63 அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 900 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 3, 2026

ஈரோடு விடுமுறை நாளில் மாற்றம்!

image

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஹோலி பண்டிகை விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி பண்டிகை கொண்டாடப்படுவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 3-ம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மார்ச் 4 (புதன்கிழமை) அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News March 3, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 2, 2026

ஈரோடு: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

image

ஈரோடு மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!