News May 10, 2024

பவள மாலை அலங்காரத்தில் நெல்லையப்பர்..!

image

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பவளமாலை அலங்காரத்தில் காட்சியளித்தார். நெல்லையப்பர் கோவில் வசந்த விழாவின் 16ம் நாள் நிகழ்ச்சியில் நேற்று (மே 9) இரவு சுவாமி காந்திமதி அம்பாளுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. அப்போது நெல்லையப்பர் பவள மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News August 29, 2025

நெல்லை: 1.5 இலட்சம் வரை சம்பளம்!

image

நெல்லை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<> கிளிக்<<>> செய்து பார்வையிடவும். நண்பர்களுக்கு தகவலை *தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News August 29, 2025

தீபாவளியை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்

image

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு ஆயுதபூஜை, தீபாவளி விழா கால சிறப்பு ரயில்கள் – இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது.
1. நாகர்கோயில் – தாம்பரம் – நாகர்கோயில் (வழி:திருநெல்வேலி)
2.திருநெல்வேலி – சென்னை எழும்பூர் – திருநெல்வேலி. 3. சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி – சென்னை சென்ட்ரல். 4.சென்னை சென்ட்ரல்- செங்கோட்டை- சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

News August 29, 2025

BREAKING: நெல்லை பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை

image

நெல்லை பல்கலையில் இரு சமூக மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலவரையற்ற விடுமுறை அளித்து மனோன்மனியம் சுந்தரனர் பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக இரு சமூக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!