News August 16, 2025
பழைய கார் விற்பனையில் பணம் மோசடி

தர்மபுரியில், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கனகசனிடம் பழைய கார் விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 4.30 லட்சம் மோசடி செய்த வழக்கில், வடிவேல் என்ற நபர் கைது செய்யப்பட்டார். காரின் ஆர்.சி புத்தகத்தை தராமல் மீதி பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியதால், கனகசன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையினர் வடிவேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
தருமபுரியில் ஆடி கிருத்திகைக்கு இதை செய்யுங்க!

ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று இங்கு பல பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுவார்கள்.இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஷேர்
News August 16, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன், அரூர் வான்மதி, பென்னாகரம் குமரவேல் மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்க
News August 15, 2025
தர்மபுரி ஹோட்டலில் சாப்பிடுவோர் கவனத்திற்கு

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரே நாளில் 100 இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் பழைய சிக்கன், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டிகள், பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யை உபயோக படுத்திய கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதித்தனர். மேலும், பொதுமக்கள் உணவு தொடர்பாக 9444042322 என்ற எண்ணிலோ அல்லது <