News April 28, 2024
பழவேற்காட்டில் கடல் ஆமைகள் விடுவிப்பு

பழவேற்காடு, கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் வசிக்கும் ஆமை வகைகளில் ஒன்றான ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – மார்ச் மாதம் வரை கடற்கரைக்கு வந்து முட்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனிடையே பழவேற்காடு வனத்துறையினர் கடந்த டிசம்பர் முதல் மார்ச் 15-ந் தேதி வரை 11,786 முட்டைகளை சேகரித்து பாதுகாத்தனர். அதில் குஞ்சு பொறித்த 9,418 ஆமைகளை நேற்று மாலை கடற்கரையில் விடுவித்தனர்.
Similar News
News August 23, 2025
திருவள்ளூர்: முருகனுக்கு வினோதமாக வெந்நீர் அபிஷேகம்

திருத்தணி முருகன் கோயில் கருவறை பின்புறம் உள்ள பாலமுருகனுக்கு மார்கழி திருவாதிரையில், வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் குளிர்காலம் என்பதால், முருகன் மீது இருக்கும் அன்பின் காரணமாக வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக இங்கு தான் வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
திருவள்ளூரில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

திருவள்ளூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த <
News August 22, 2025
திருவள்ளூர்: போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி

திருவள்ளூர் மாவட்டம் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வயது 18 முதல் 35 இருக்க வேண்டும். பயிற்சி பெற விரும்புவார்கள்(www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.