News November 24, 2025
பழமையான நட்சத்திரங்களை கண்டறிந்த நாசா

பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் பிரபஞ்சம் உருவான போது தோன்றிய மிக மிகப் பழமையான நட்சத்திரங்களை தனது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் நாசா கண்டறிந்துள்ளது. LAP1-B galaxy என்ற அண்டத் தொகுதியில் உள்ள இவற்றை Population III, or POP III என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். பூமியில் இருந்து சுமார் 130 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன இவை, சூரியனை விட 100 மடங்கு சக்திவாய்ந்த UV ஒளியை வெளிவிடுகின்றன.
Similar News
News November 24, 2025
BREAKING: சேலத்தில் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் பிருந்தாதேவி விடுமுறை அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
News November 24, 2025
காங்., படுதோல்விக்கு இதுவே காரணம்: அண்ணாமலை

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை, இந்தியா முழுதும் உள்ள அனைத்து மக்களிடமும் இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். இதே மனநிலைதான் பிஹாரில் இருந்ததாகவும், அதனால்தான் NDA கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிஹாரில் காங்கிரஸுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதே நிலைதான் தமிழகத்திலும் நடக்கும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 24, 2025
ஷுப்மன் கில் எப்போது அணிக்கு திரும்புவார்?

தெ.ஆ., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மும்பையில் பிரபல முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவரும் அவர், 2026-ல் தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.


