News August 24, 2024
பழனி முருகன் மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர்

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இன்றும், நாளையும் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக சற்றுமுன் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும், குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II / IIA பணிகள்) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.02.26 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் இரு வேளைகளிலும் நடைபெறவுள்ளது. தேர்வர்கள் சரியான நேரத்திற்கு வரவேண்டும், தேர்வு மையங்களுக்கு கூடுதல் பேருந்து ஏற்பாடு செய்யபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
உடனடி கடன் ஆசை.. மோசடி ஆபத்து.. எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் உடனடி கடன் தருவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அழைப்புகள் மூலம் பண மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. மோசடி ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 இல் புகார் அளிக்கலாம் .