News February 14, 2025

பழனி தைப்பூசத் திருநாளில் ரூ.40 லட்சம் வசூல்

image

பழநி முருகன் கோயிலில் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தனர். அதன்படி 4 நாட்களாக 1400 பஸ்கள் இயங்கியது. 3000 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றினர். அந்தவகையில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் வசூலாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 16, 2025

திண்டுக்கல்: செஸ் வீரர் பிரனேஷ்க்கு அமைச்சர் வாழ்த்து

image

திண்டுக்கல், சென்னையில் நடைபெற்ற செஸ் கிராண்ட்மாஸ்டர் தொடரில் சேலஞ்சர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீரர் பிரனேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமை சதுரங்க உலகில் புதிய உயரங்களை எட்டும் பயணத்துக்கு வலுவான அடித்தளமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள் என ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும் ஆன அ.ர.சக்கரபாணி வாழ்த்தி உள்ளார்.

News August 16, 2025

திண்டுக்கல்: ரூ.62265 சம்பளம்-அரசு உதவியாளர் வேலை!

image

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.22405 முதல் ரூ.62265 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை ஆக.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக் <<>>செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். திண்டுக்கல் மக்களே வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 16, 2025

BREAKING திண்டுக்கல்: அமைச்சர் பெரியசாமி வீட்டில் ED ரெய்டு

image

திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, கோவிந்தாபுரம், அசோக்நகர், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீடு, சீலப்பாடியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வீடு ஆகிய 3 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய மத்திய CRPF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!