News February 15, 2025

பழனி உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை 

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.3 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 776 கிடைத்தது. தங்கம் 557 கிராமும், வெள்ளி 21,235 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 1,153 கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக கிடைத்தது.

Similar News

News August 16, 2025

BREAKING திண்டுக்கல்: அமைச்சர் பெரியசாமி வீட்டில் ED ரெய்டு

image

திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, கோவிந்தாபுரம், அசோக்நகர், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீடு, சீலப்பாடியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வீடு ஆகிய 3 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய மத்திய CRPF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News August 16, 2025

திண்டுக்கல்: ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

image

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 15, 2025

திண்டுக்கல்: இளைஞர்களுக்கு வீடியோ எடிட்டிங் பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு “வீடியோகிராபி மற்றும் வீடியோ எடிட்டிங்” சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://iei.tahdco.com/vve_reg.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!