News October 27, 2025

பழனி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மானூறை சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது (27). இவர் கீரனூரில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான மானுருக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது நரிக்கல்பட்டி அருகில் உள்ள தயிர் சாலை என்னும் இடத்தில், எதிரில் வந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 27, 2025

உடல் தானம் செய்தவரை நேரில் அழைத்து வாழ்த்து!

image

வேடசந்தூர் – கூவக்காப்பட்டியை சேர்ந்த முருகேசன் தனது வாழ்நாளிற்கு பிறகு தனது முழு உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவும் விதமாகவும், தன்னால் பிற உயிர்கள் பயன் பெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடும், உடல் தானத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பதிவு செய்துள்ள செய்தி அறிந்து, அவரை சென்று பாராட்டிய வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் பாராட்டினார்.

News October 27, 2025

திண்டுக்கல்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

திண்டுக்கல் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (SHARE பண்ணுங்க)

News October 27, 2025

பழனியில் கடையை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் – திண்டுக்கல் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையை மர்ம நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்து சென்றார். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்கால் பச்சூரை சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்குமார் (54) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!