News August 2, 2024
பழனியில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள 7வது கொண்டை ஊசி வளைவில் இன்று (ஆக.2) சென்றுகொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டை இழந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். தகவலின்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அடிவாரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
Similar News
News August 5, 2025
திண்டுக்கல்லில் தங்கத்துடன் இலவச திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்க உள்ளனர். இந்தத் திட்டத்தின் படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 5, 2025
திண்டுக்கல் விவசாயிகள் கவனத்திற்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேடசந்தூர் அருகே சேனன்கோட்டையில் அமைந்துள்ள முருங்கை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அணுகி பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 9442060637, 9443592508 , 9894060869 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

திண்டுக்கல் மக்களே.., வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.SHARE