News April 11, 2024

பழனியில் ரமலான் கொண்டாட்டம்

image

பழனி அடுத்த ஆயக்குடியில் காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக நல அறக்கட்டளை சார்பாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிர்வாக இயக்குனர் அஜ்மத் அலி தலைமையில் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு ரமலான் பண்டிகை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News July 9, 2025

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்க்கான சிறப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மூஞ்சிக்கல்லில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (கலையரங்க கூடத்தில்) ஜூலை.10 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு முகாம் அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை நடைபெற உள்ளது. இதில் 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதில் அதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படங்கள் 4 உடன் கலந்து கொள்ளலாம்.

News July 8, 2025

திண்டுக்கல்: பெண்களுக்கான இலவச ஆரி ஓர்க் பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின்ரோடு சிறுமலைபிரிவு அருகில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச ஆரி ஒர்க் , எம்ப்ராய்டரி பயிற்சிக்கான முன்பதிவு இன்று ( ஜூலை 8 ) முதல் நடைபெறுகிறது. இதில் 18 வயது முதல் 45 வயதுடைய பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு : 88700 76537, 83449 50658, 90802 24511

News July 8, 2025

கொத்தப்பள்ளி கதிர்நரசிங்கர் கோயில்!

image

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் புகழ்பெற்ற கதிர்நரசிங்கர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

error: Content is protected !!