News January 6, 2025
பழனியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தடை

திண்டுக்கல் மாவட்டம் பழனி, சார்ஆட்சியர் அலுவலகத்தில் சார்ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகர் முழுவதும் 500ML தண்ணீர் பாட்டில், ரூ.10 குளிர்பான பாட்டில் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நெகிழி இல்லா பழனி மாநகரை உருவாக்க வேண்டும் என்று சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
Similar News
News January 31, 2026
வத்தலகுண்டில் பரபரப்பு; அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வத்தலகுண்டு காந்திநகரைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி வழக்குரைஞா். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 16 நாள்களாக ஜெயபாண்டி வீடு பூட்டியே கிடந்தது. மேலும், வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஜெயபாண்டி அழுகியநிலையில் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து போலீஸார் விசாரணை
News January 31, 2026
திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய திருடன்!

திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டியை சேர்ந்தவர் மாயன் (வயது 46). இவர் வத்தலக் குண்டு சர்வீஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ஸ்ரீரங்கன் (28) என்பவர் மாயனிடம் கத் தியை காட்டி செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து ஸ்ரீரங்கனை கைது செய்தனர்.
News January 31, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஜனவரி 30 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


