News December 31, 2025
பழனியில் கோடி கணக்கில் மோசடி? பெண் அதிரடி கைது!

பழனி மற்றும் தாழையூத்தை சேர்ந்த ஆடிட்டர் முத்துநாராயணன் என்பவர் தனது நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் கலையரசி (43), ரஞ்சிதா (34) மற்றும் கவுதம் (34) ஆகிய மூவரும் கடந்த 2 ஆண்டுகளாகப் போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாகக் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மேலாளர் கலையரசியை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவரைத் தேடி வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 24, 2026
பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கோர்ட் அதிரடி!

பழனியில் 2023 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் தொல்லை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பழனி ராசாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (44) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
News January 24, 2026
நிலக்கோட்டை அருகே சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள அழகம்பட்டியைச் சேர்ந்தவர் சின்ன முத்து (30). இவர் பஞ்சர் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவு வேலையை முடித்துவிட்டு காமுபிள்ளை சத்திரத்திலிருந்து, அழகம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலை ஓர மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


