News December 28, 2024
பழநி கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. அதில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரூ. 3 கோடியே 5 லட்சத்து அறுபத்து ஆறாயிரத்து 475, வெளிநாட்டு கரன்சி 863, 861 கிராம் தங்கம், 13.822 கிராம் வெள்ளி கிடைத்தது. உண்டியல் என்னும் பணியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 19, 2025
திண்டுக்கலில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஆகஸ்ட் 19) நடைபெறுகிறது. பழனி பெருநகராட்சியின் 10, 11, 12 வார்டுகளுக்காக, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடையலாம். திண்டுக்கல் மாநகராட்சி, அகரம் பேரூராட்சி, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
News August 18, 2025
திண்டுக்கல்: ரூ.1,81,500 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறவனத்தில் (TNPL) ரூ.1,81,500 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 20) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 18, 2025
திண்டுக்கல்: பேக்கரியில் கொள்ளை

திண்டுக்கல்: வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.