News October 24, 2025

பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு; மூவர் தப்பியோட்டம்!

image

பழநி சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மதுரையை சேர்ந்த ஹரிமணி (18), அவரது நண்பர்கள் முத்துக்குமார் (19), கவுதம் (19) ஆகியோர் வந்து மதுபோதையில் தகராறு செய்துள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசி, அங்கிருந்த கார் மற்றும் பேக்கரி ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 24, 2025

பிரதம மந்திரி கல்வி உதவி கால அவகாசம் நீட்டிப்பு

image

திண்டுக்கல்: பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப அவகாசம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை தாண்டக்கூடாது. கடந்தாண்டு பயனடைந்தவர்கள் விண்ணப்பத்தை https://scholarships.gov.in இணையதளத்தில்
புதுப்பிக்கலாம்.

News October 24, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் புகார் குழு கட்டாயம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் & தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்-2013 படி உள்ளக புகார் குழு அமைத்து, விவரங்களை SHE BOX இணையதளத்தில் பதிவேற்றி, மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தவறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

சாலை விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலையில் காயம் ஏற்படுவதால் நடக்கின்றன. இதனை தடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சமூக வலைத்தளத்தில் இன்று (அக்.24) “தலைக்கவசம் அணிவோம். உயிரிழப்பை தவிர்ப்போம்” என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பே முதன்மை. அனைவரும் பாதுகாப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!