News May 25, 2024
பழங்குடியின மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு

2024-25ஆம் ஆண்டிற்கான முதுநிலை, PHD மற்றும் முனைவர் ஆராய்ச்சி 2 (National Overseas Scholarship Scheme (NOS)) தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணாக்கர்கள் கீழ்க்காணும் இணைய வழியில் https://overseas.tribal.gov.in/ விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் ஒன்றியம், தைலாபுரத்தில் இன்று (ஜூலை 5) பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 8, 2025 செவ்வாய்க்கிழமை அன்று பா.ம.க. செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 5, 2025
திண்டிவனம் அரசு மருத்துவமனை சாதனை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற சென்ற சிறுமி கோமதி (17) அவருக்கு கையின் எலும்பு வளர்ச்சி குன்றி இருந்தது. அதனை அறுவை சிகிச்சை செய்து 140 நாட்களில் 14 செ.மீ வளர செய்து திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் மருத்துவ குழுவினர்கள் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.
News July 5, 2025
விழுப்புரம் நகரில் விளம்பர பதாகை வைக்க கட்டுப்பாடு

விழுப்புரம் நகரில் விளம்பர பதாகைகள் வைப்பது குறித்த கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சார்பில் இன்று (ஜூலை 5, 2025) அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிந்திரகுமார் குப்தா மற்றும் நகராட்சி ஆணையர் வசந்தி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.