News May 17, 2024

பழங்குடியின மாணவர்களுக்கு உதவி தொகை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணாக்கர்கள் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகளை வெளிநாடுகளில் பயில மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 24 25 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணைய வழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 5, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் உழவர் சந்தை விலை விவரம்

image

கிருஷ்ணகிரி உழவர் சந்தையின் (செப். 05) விலை பட்டியல் இதன்படி, 1கிலோ தக்காளி ரூ.16, உருளை ரூ.24, வெங்காயம் ரூ.35, மிளகாய் ரூ.45, கத்திரி ரூ.22, வெண்டைக்காய் ரூ.20, முருங்கை ரூ.35, பீர்க்கங்காய் ரூ.22, சுரைக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.20, பாகற்காய் ரூ.26, தேங்காய் ரூ.58, முள்ளங்கி ரூ.12, பீன்ஸ் ரூ.45, அவரை ரூ.35, கேரட் ரூ.70, கீரை ஒரு கட்டு ரூ.10, கொத்தமல்லி ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது.

News September 5, 2025

கிருஷ்னகிரி: ரூ.1,50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

கிருஷ்னகிரி: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த லங்கில்<<>> சென்று பார்த்துக்கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் .

News September 5, 2025

கிருஷ்னகிரி: வடமாநில இளைஞர் விபத்தில் பலி

image

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கோரக்ராம், (39) கிருஷ்ணகிரி, பி.குருபரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பேரிகை-சூளகிரி சாலையில் உள்ள சீகனப்பள்ளி பஸ்ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், கோரக்ராம் மீதுமோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!