News June 13, 2024

பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

image

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் வனப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள கரிக்கையூர் ஆதிவாசி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் கோத்தகிரி காவல்துறை சார்பில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் போக்சோ சட்டம் மற்றும் மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Similar News

News December 27, 2025

நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News December 27, 2025

நீலகிரி வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

நீலகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குன்னூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (டிச.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!