News April 20, 2024
பழங்குடியின பெண்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

நீலகிரியில் குறும்பர், இருளர், தோடர், கோத்தர் போன்ற பல்வேறு பழங்குடியினர் வசித்து வருகின்றனர். நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் கோத்தகிரி பகுதியில் உள்ள கோத்தர் இன பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தங்களுக்கான வாக்கு சாவடியில், வாக்களித்து ஜனநாய கடமையை நிறைவேற்றினர். வாக்களிப்பது எங்கள் உரிமை என்று கூறினர்.
Similar News
News February 7, 2026
நீலகிரியில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)
News February 7, 2026
நீலகிரி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீலகிரி மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
நீலகிரியில் சிறுத்தை பலி!

நீலகிரி மாவட்டம் குந்தா, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குந்தா மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர், சிறுத்தையின் உடல் அதே இடத்திலேயே எரியூட்டப்பட்டது.


