News May 20, 2024

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட பள்ளி வாகனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் பணி இன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.பி. ஜெயக்குமார், கோட்டாட்சியர் சங்கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News November 20, 2024

திருவாரூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை

image

வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் (நவ.20) அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவலை பகிரவும்!

News November 20, 2024

கிராமசபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் வரும் 23 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தூய்மை இந்தியா ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

திருவாரூர் மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் உட்பட நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.