News November 15, 2025
பள்ளி மாணவி மரணம்.. நெஞ்சை உலுக்கிய கொடுமை

குழந்தைகள் தினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள் கூடுதலாக கவனிப்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் நடந்ததே வேறு. நேற்று(நவ.14) பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்ற 6-ம் வகுப்பு மாணவி காஜலை, 100 முறை தோப்புக் கரணம் போடச் சொல்லி பனிஷ்மெண்ட் கொடுத்துள்ளனர். ஸ்கூல் பேக்குடன் தோப்புக் கரணம் போட்ட அந்த மாணவி, வீடு திரும்பியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இத்தகைய பள்ளிகளை என்ன செய்வது?
Similar News
News November 16, 2025
அடிப்படை புரிதலின்றி பேசும் EPS: TRP ராஜா

தமிழகத்திற்கு வர இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவதாக <<18295289>>EPS குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், எவ்வித அடிப்படை புரிதலுமின்றி ஊர் வம்பு பேசும் பெருசுகள் போல EPS குற்றம்சாட்டி வருவதாக அமைச்சர் TRP ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல எனவும் கூறியுள்ளார்.
News November 16, 2025
பொங்கல் விடுமுறை.. வந்தது HAPPY NEWS

பொங்கல் விடுமுறையையொட்டி தமிழகத்தில் 500+ சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலன் கருதி வழக்கமான ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்றும், மதுரை, திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெட்டிகள் அதிகரிப்பால் Waiting List பற்றி கவலைப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 15, 2025
தவெக தொண்டர்களுக்கு N.ஆனந்த் அழைப்பு

SIR-க்கு எதிராக தவெக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என N.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். SIR பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் இருப்பதாகவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார் . SIR-க்கு எதிராக நாளை காலை 11 மணி அளவில் தவெக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


