News November 23, 2025

பள்ளி மாணவி கர்ப்பம்.. 19 வயது பையன் சிக்கினான்

image

திருச்சியில் <<18313662>>பள்ளி மாணவி கர்ப்பமான<<>> செய்தி அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் கடலூர், குறிஞ்சிப்பாடி அருகே நடந்துள்ளது. 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கும், 19 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். விஷயம் வெளியே தெரிந்ததை அடுத்து, இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 23, 2025

தருமபுரி: மது பாட்டில்கள் விற்ற பெண் கைது!

image

தருமபுரி மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரோடு கார்த்திகேயபுரம் பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று (நவ.23) ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரண்யா (31) என்பவர் வீட்டின் பின்பக்கம் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

News November 23, 2025

NDA கூட்டணியில் மீண்டும் இணைவேன்: OPS

image

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக OPS தெரிவித்துள்ளார். செங்கோட்டையன், தினகரனுடன் சந்திப்பு தொடர்ந்து நடந்து வருவதாக கூறிய அவர், அதிமுகவில் பிரிந்தவர்களை இணைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். <<18363937>>தினகரன்- அண்ணாமலை<<>> சந்திப்பு நல்லதற்கே என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 23, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

image

புயல் அலர்ட்டால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. SHARE IT.

error: Content is protected !!