News December 6, 2025

பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆசிரியருக்கு அதிரடி தண்டனை

image

குன்னூரில் கடந்த 2023-ல் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இசை ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இசைப் பயிற்சிக்கு சென்ற மாணவியை, ஆசிரியர் பிரசாந்த் ரேப் செய்த நிலையில், மாணவி கர்ப்பமானார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கோர்ட், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹2 லட்சம் நிவாரணம் அளிக்கவும் TN அரசுக்கு உத்தரவிட்டது.

Similar News

News April 9, 2026

ஹிஸ்புல்லா தலைவரை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல்

image

ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் நைம் காசிம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே 2 வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தாலும், இது லெபனானுக்கு பொருந்தாது என நெதன்யாகு கூறியிருந்தார். <<19603510>>லெபனானில்<<>> உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஷேக் நைம் காசிமை கொன்றுவிட்டோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதனை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தவில்லை.

News April 9, 2026

ஆண்களிடம் குறையும் பாலியல் உணர்வு..

image

வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட சில காரணங்களால் ஆண்களிடம் பாலியல் உணர்வு(Libido) குறைந்து வருவது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மனச்சோர்வால், குறிப்பாக இளைஞர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து பாலியல் உந்துதலை நேரடியாக பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம் மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். BE ALERT!

News April 9, 2026

வாக்காளர்களை கடைசி நேரத்தில் அலர்ட் செய்த விஜய்

image

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என விஜய் தனது X பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!