News January 1, 2026
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரன் கைது

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேட்டூரில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மாணவி சற்று மனநலம் குன்றியவர் என்பதால், கூலித் தொழிலாளி சரண் என்பவர் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். தற்போது, போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News January 25, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 25, தை 11 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News January 25, 2026
முந்தைய நாள் வரை KAS அழைத்தார்: TTV

தான் தவெகவுடன் வருவேன் என ஒருநாளும் சொல்லவில்லை என TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் சீனியரான செங்கோட்டையன் அவரே முடிவெடுத்து தவெகவுக்கு போய்விட்டார் என்றும், அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதற்கு முந்தைய நாள் வரை, தன்னை தவெகவில் இணையும்படி அழைத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார். ஆனால் NDA-ல் இணைந்தபின் அழைத்தபோது, அவர் என்னிடம் பேசவே இல்லை எனறு என்றும் கூறியுள்ளார்.
News January 25, 2026
தமிழகத்தை சேர்ந்த தலைவருக்கு பாரத ரத்னா?

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மூவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படாத நிலையில், இந்தாண்டு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜிக்கும், அதேபோன்று தென் TN-ஐ சேர்ந்த தலைவர் ஒருவருக்கும் வழங்கப்படலாம் எனவும் PM அலுவலகத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


