News March 21, 2024
பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம்

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 14 ஆவது வார்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்த 9 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் சொந்த செலவில் விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்றனர். இதில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் விமானத்தில் சென்றனர்.
Similar News
News September 25, 2025
செங்கல்பட்டு: நாளை மறுநாள்! மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 27-ம் தேதி பையனூரில் உள்ளவிநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் – ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 8th, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 9486870577 / 9384499848 என்ற எண்களை அழைக்கலாம். (ஷேர் பண்ணுங்க)
News September 25, 2025
தாம்பரம் மாநகராட்சி கடும் எச்சரிக்கை

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், ஸ்பூன், ஃபோர்க், தட்டு, கேரிபேக் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே வணிக நிறுவனங்கள் விதிகளை மீறி இவற்றை விற்பனை செய்வது அல்லது பயன்படுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 25, 2025
செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தபடுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கபடுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.