News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளாம். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News January 25, 2026
தி.மலை: ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் நரேஷ் (18), நிலத்தில் இருந்த தாத்தாவிற்கு உணவு கொண்டு சென்றபோது, விருப்பாட்சிபுரம் ஏரியில் கால் கழுவ முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 25, 2026
தி.மலையில் பரபரப்பு: மாணவி திடீர் மாயம்!

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவைச் சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவி, நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், மாணவியின் தாயார் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News January 25, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


