News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 16, 2025
சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு

சென்னையில் ஏப்.21-ம் தேதிக்கு பிறகு கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், 1 டன் அளவுக்கு கட்டடக் கழிவுகள் இருந்தால் சென்னை மாநகராட்சி இலவசமாக அகற்றும். 1 முதல் 20 டன் வரை கட்டடக் கழிவுகளை அகற்ற ரூ.3,300 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். *சென்னை வாசிகளுக்கு பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*
News April 16, 2025
சென்னையில் அரசு வேலை; 12th பாஸ் போதும்

சென்னையில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் காலியாக உள்ள 36 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.19,500 – ரூ .71,900 சம்பளம் வழங்கப்படும். குறிப்பாக இந்த பணிக்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
News April 16, 2025
நடக்காத விதிமீறல்; வாகனங்களுக்கு அபராதம்

சென்னையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கும், விதிமீறலில் ஈடுபட்டதாக மொபைல் போன் எண்ணிற்கு அபராத ரசீது வருவது, ஓட்டுநர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், இத்தகைய மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும், இத்தகைய குளறுபடி இருந்தால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். SHARE IT.