News May 7, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

கரூர்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 6, 2025
கரூர்: கடவூரில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மைலம்பட்டி மற்றும் குருணிகுளத்துப்பட்டி கடைவீதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிந்தாமணிபட்டி போலீசார், மாப்பிள்ளை மைதீன் (48), கமருதீன் (58), முஜிப் பெருமான் (50) ஆகியோர் மீது வழக்கு பதிந்து , இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
News November 5, 2025
கரூர்: வரும் 8ஆம் தேதி ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் நவம்பர் 8 அன்று ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதிய கார்டு கோருதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்படும். மேலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News November 5, 2025
கரூர் காவல்துறை வேண்டுகோள்!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .“அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகளில் 9498100780, காவல்துறை உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


