News December 23, 2025
பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை

நாளை முதல் மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
விழுப்புரம்: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
விழுப்புரம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
புதிய பேருந்து நிலையத்தில் பெயர் பலகை பொருத்தும் பணி

திண்டிவனம் நகராட்சியின் புதிய அதிநவீன பேருந்து நிலையத்தில் இறுதிக்கட்டமாக “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்” பெயர் பலகை பொறுத்தும் பணி இன்று டிச. 27 நடைபெற்று வருகிறது. இதனை திண்டிவனம் நகர தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் பார்வையிட்டார். உடன், நகர மன்ற உறுப்பினர் உறுப்பினர் ஆர்.ஆர். எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.


